ஒரு பஸ்சில் 2 எண்ணால் பயணியர் குழப்பம்

ஆத்துார்: தம்மம்பட்டி கிளை பணிமனையில் இருந்து தடம் எண்: 23 பஸ், ஆத்துாரில் இருந்து கடம்பூர், கூடமலை வழியே தம்மம்பட்டிக்கு இயக்கப்படுகிறது. அதேபோல் தடம் எண்: 28, ஆத்துாரில் இருந்து மல்லியக்கரை, கீரிப்பட்டி வழியே தம்மம்பட்டிக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் தட எண்: 28 என்ற டவுன் பஸ்சில், 28, 23 என, இரு எண்கள் அடங்கிய, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பயணியர் குழப்பம் அடைகின்றனர்.


இதுகுறித்து தம்மம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஷாஜகான் கூறுகையில், ''தடம் எண்: 23 பஸ் பழுதுபார்ப்பு பணியில் உள்ளதால், 28 எண் கொண்ட பஸ்சை இயக்கி வருகிறோம். 28 என்ற தட பஸ்சுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்துள்ளோம். சீரமைப்பு பணி முடிந்த பின், 28 பஸ்சில் உள்ள ஒரு வழித்தட எண் மறைக்கப்படும்,'' என்றார்.

Advertisement