யாருடன் விருந்து சாப்பிட பிடிக்கும்: ஜெய்சங்கர் அளித்த 'நச்' பதில்

6

புதுடில்லி: '' வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யார் ஒருவருடன் விருந்து சாப்பிட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் வைரலாகி உள்ளது.


முன்னாள் வெளியுறவு செயலாளரான ஜெய்சங்கர், தற்போது வெளியுறவு அமைச்சராக உள்ளார். உலக அரங்கில் கடினமாக கேட்கப்படும் எந்த கேள்விக்கும் அவர் உடனடியாக பதிலளித்து, கேட்டவர்களையே திகைப்பில் ஆழ்த்துவார். உள் அர்த்தத்துடன் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கு சளைக்காமல் ஜெய்சங்கர் பதிலளிக்கும் நிகழ்வு பல முறை நடந்துள்ளது.


அந்த வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கரிடம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் ஒருவருடன் விருந்து சாப்பிடுவீர்கள் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.


அதற்கு ஜெய்சங்கர் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக, ''இது நவராத்திரி காலம். நான் விரதம் இருக்கிறேன்''. என பதிலளித்தார்.


இதற்கு கேள்வி கேட்டவர் மட்டுமல்லாமல், இந்த நிகழச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் பலத்த கைதட்டி சிரித்தனர்.

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணைகளை பரிசோதனை செய்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வருகிறார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஜார்ஜ் சோரோஸ், இந்தியாவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார்.

Advertisement