ஏழு முனைகளில் போரிடும் இஸ்ரேல் : பிரான்ஸ் அதிபருக்கு நெதன்யாஹூ பதிலடி

10


டெல் அவிவ்: ''மனித நாகரிகத்தின் எதிரிகளிடம் ஏழு முனைகளில் இருந்து போரிட்டு வருகிறோம் என்பதை பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் தெரிவித்து கொள்கிறோம்,'' என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார்.


காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம். மற்ற நாடுகளும் நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். இதற்கு ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.


இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரான் தலைமையிலான காட்டுமிராண்டி சக்திகளை எதிர்த்து போராடும் இஸ்ரேலுக்கு, அனைத்து நாடுகளும் ஆதரவாக இருக்க வேண்டும். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் சில தலைவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களை நினைத்து அவமானமாக உள்ளது. ஹவுதிகள், ஹிஸ்புல்லாக்களுக்கு ஈரான் ஆயுத தடையை விதித்துள்ளதா? நிச்சயமாக இல்லை. பயங்கரவாதத்தின் அச்சு ஒன்றாக உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் ஒன்றாக இல்லை.


மனித நாகரிகத்தின் எதிரிகளுக்கு எதிராக ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேல் போரிட்டு வருகிறது என்பதை அதிபர் மேக்ரானிடம் தெரிவித்து கொள்கிறேன். அக்., 7 ல் எங்கள் மக்களை கொலை செய்து, பலாத்காரம் செய்து, தலை துண்டித்த காட்டுமிராண்டித்தனமான ஹமாசுக்கு எதிராக காசாவில் போரிட்டு வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் நெதன்யாஹூ கூறியுள்ளார்.

Advertisement