தெற்கு அரசு ஆண்கள் பள்ளியில் என்.சி.சி., முகாம் நிறைவு



நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம், தத்தெடுக்கப்பட்ட கொண்டி-செட்டிப்பட்டியில் கடந்த, 28ல் துவங்கியது. முகாமையொட்டி, பள்ளி வளாகத்துாய்மை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு, நெகிழியை தவிர்க்கும் வகையில், மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டது.



நிறைவு நாளான, நேற்று முன்தினம், பி.டி.ஏ., தலைவர் நாகரத்-தினம் பங்கேற்று, மாணவர்களின் சமூக சேவையை பாராட்டி பேசினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயராஜ் திட்ட அறிக்கை வாசித்தார். முதுநிலை

ஆசிரியர்கள் ஜெகதீசன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்து, 'நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கிய நோக்கம், சமூக சேவை மூலம் ஆளுமையை வளர்ப்-பதே. இந்த திட்டம், மாணவர்களுக்கு சமூக நல எண்ணங்களை

கற்பிக்கவும், எந்தவித பாரபட்சமும் இல்லாமல், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் அமைக்கப்பட்டது' என பேசினர்.
உதவி தலைமையாசிரியர் உமா மாதேஸ்வரி, ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.

Advertisement