பெல்ட் அவரை கிலோ ரூ.110

தேனி: தேனி மாவட்டத்தில் பண்டிகை காலம், புரட்டாசி மாத தேவை அதிகரித்த நிலையிலும் வரத்து குறைந்ததாலும் உழவர்சந்தையில் பெல்ட் அவரை கிலோ ரூ.110 க்கு விற்பனையானது.

கடந்த 15 நாட்களுக்கு முன் பெல்ட் அவரை, பட்டை அவரைக்காய் அறுவடை சின்னமனுார், சின்ன ஓவுலாபுரம், ராயப்பன்பட்டி பகுதியில் துவங்கியது.

நாள்தோறும் தேனி உழவர்சந்தைக்கு 100 கிலோ வந்த நிலையில் வரத்து முற்றிலும் குறைந்து 80 முதல் 95 கிலோவாக இருந்தது. இதனால் கிலோ ரூ.110க்கு முதல் தர பெல்ட் அவரைக்காய்களும், 2ம் தரத்தில் கிலோ ரூ.95 என விற்பனையானது.

உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது: புரட்டாசியில் இறைச்சியை பெரும்பாலான மக்கள் தவிர்ப்பதால் ஓட்டல்கள், நடுத்தர மக்கள் சாம்பார், பொரியலுக்கு பட்டை அவரை, பெல்ட் அவரைக்காய்களையும், மலை பீன்ஸ் வகைகளையும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

தேவை அதிகரித்த நிலையில் உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் நேற்று ஒரு கிலோ பெல்ட் அவரை ரூ.110க்கு விற்பனையானது. சீசன் துவங்கியதால் அடுத்தடுத்த நாட்களில் பெல்ட், பட்டை அவரை, மலை பீன்ஸ், சீனிவரக்காய் சராசரி விலைக்கு விற்பனையாகும், என்றார்.

Advertisement