கடற்படை தளத்தில் 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள்: ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

புதுடில்லி: கடற்படை கப்பல் பழுது நீக்கும் தளத்தில், 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5.
கர்நாடகா மாநிலம் கார்வாரில் அமைந்துள்ள கடற்படை கப்பல் பழுது நீக்கும் தளத்தில், கிரேன் ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு 210 அப்ரென்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கல்வி தகுதி என்ன?




அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.ஐ.டி., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு



விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 16 வயது முதல் அதிகபட்சம் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்வது எப்படி?



எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பாகிய வெற்றி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிப்பது எப்படி?



http://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement