பனை விதைகள் நடும் நிகழ்வு ஆலோசனை வழங்க அழைப்பு

விழுப்புரம்: அனைத்து கிராமங்களிலும் பனை விதைகள் நடும் நிகழ்வு குறித்து ஆலோசனை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில், வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன், அனைத்து கிராம ஊராட்சி களிலும் பெருவாரியாக பனை விதைகள் நடும் விழாவிற்கு, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், நாளை 8ம் காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் எனது தலைமையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில், விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்று ஆலோசனைகளையும் பங்களிப் பினையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பருவ மழைக்கு முன்பாக, நம் மாவட்டத் தில் பெருவாரியாக மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வினையும் மேற்கொள்ளப்படுகிறது. மரக்கன்றுகள் கிடைக்கும் விபரத்தினையும், எண்ணிக்கையினையும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement