விழிப்புணர்வு கூட்டம் 

கோட்டக்குப்பம்: போதைப் பொருட்கள் தடுப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் மற்றும் பாலியல் குற்றம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சின்ன கோட்டக்குப்பத்தில் நடந்தது.

காவல் துறை சார்பில் நடந்த கூட்டத்தில், 13, 14வது பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர்கள் ஜெயஸ்ரீ சுகுமார், சுகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசுகையில், 'நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க போலீசார் பல்வேறு கட்ட நடவ டிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். யாரிடமும் சிட் பண்ட், கட்டி ஏமாற்றம் அடைய வேண்டாம். சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதுடன் கண்காணிக்க வேண்டும்' என்றார்.

இதே போன்று, பெரிய முதலியார்சாவடி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், பள்ளி பருவத்தில் பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுக்கக் கூடாது. பிள்ளைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அவலுார்பேட்டை



அவலுார்பேட்டையில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமை தாங்கி, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது. போக்சோ வழக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமண தடைச் சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் போதை பொருட்களின் தீமையும், குற்றங்களுக்கான தண்டனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். கிராம மக்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement