சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கல்

திண்டிவனம்: திண்டிவனம் ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் தலைவர் ஏழமலை தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுகுமார் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் சஞ்சீவி, சந்தானம் முன்னிலை வகித்தனர்.

ஓலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், காயத்ரி ஆகியோரிடம் இன்வெட்டர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொருளாளர் நவநீதன், சங்க நிர்வாகிகள் பாலாஜி, முரளி கண்னன், ரவி, புஷ்பராஜ், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement