கண்டமங்கலம் ஒன்றிய கூட்டம்

கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில், ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.

பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் சத்தியராதா தீர்மானங்களை வாசித்தார்.

ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளில் அரசின் திட்டப் பணிகளை மேற்கொள்வது. பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது உட்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணை பி.டி.ஓ.,க்கள் உமா, காஞ்சனா, ஜோதி, ஒன்றிய பொறியாளர் ஆர்த்தி, அலுவலர்கள் சேதுராமன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement