அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

84

சேலம்: 'மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. அ.தி.மு.க., ஆட்சியின் போது தி.மு.க., அரசியல் செய்ய வில்லையா?' என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.


சேலத்தில் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விமான சாகச நிகழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இது தான் உயிரிழப்பிற்கு காரணம். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.


அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க., அரசியல் செய்ய வில்லையா? விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் தான் அழைப்பு விடுத்தார். அவர் தான் பொறுப்பு. அரசின் அழைப்பை நம்பி வந்த மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது அரசின் தவறு.

அடிப்படை வசதிகள்



தமிழக அரசின் செயலற்றத் தன்மையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை. எத்தனை பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பதை அரசும், உளவுத்துறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாக்குபோக்கு கூறி தப்பிப்பது சரியல்ல. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement