கேரள பாதிரியாருக்கு கார்டினல் பதவி: போப் உத்தரவு

3

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த மான்சிஞர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பாதிரியார்களுக்கு கார்டினல் பதவி உயர்வு அளித்து போப் பிரான்சிஸ் உத்தரவிட்டு உள்ளார்.


கோட்டயம் மாவட்டம் செங்கனசேரியை சேர்ந்தவர் ஜேக்கப் கூவக்காடு. சைரோ மலபார் தேவாலயத்தின் உறுப்பினரான இவர்,கடந்த 3 ஆண்டுகளாக போப் பிரான்சிஸ் வெளிநாடு செல்லும் போது உடன் சென்று வருகிறார். தன்னுடைய பயணத்தை சிறப்பாக ஒருங்கிணைப்பதாக அவருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.


கூவக்காடு பாட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவரை வீடியோ காலில் அழைத்த போப் நலம் விசாரித்து இருந்தார். இந்நிலையில், ஜேக்கப் கூவக்காடு உள்ளிட்ட 21 பேருக்கு கார்டினல் பதவி உயர்வு அளித்து போப் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான விழா டிச.,8 ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement