ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலம் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் ஆதரவு

பழநி: பிராமண சமுதாயத்தை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நவ.3, ல் சென்னையில் நடக்கும் ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்திற்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை: பிராமண சமூகத்தை பாதுக்காக்கும் விதத்தில் சட்டம் கொண்டுவர மத்திய மாநில அரசுகனை வலியுறுத்தி நவ.,3ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கோட்டை வரை ஊர்வலம் நடத்த ஹிந்து மக்கள் கட்சி மேற்கொண்ட முயற்சியை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். இந்த செயலுக்காக அர்ஜுன் சம்பத், ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிக்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டிருக்கும்.

தமிழ் வளர்ச்சிக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் பங்களித்த பிராமண சமூகம் குறிவைக்கப்படுகிறது. உண்மையைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் பிராமண சமூகம் எல்லாவற்றுக்கும் இழிவுபடுத்தப்படுகிறது.

தனித்தனியாகக் குறிவைக்கப்படும் அனைத்து சமூகங்களையும் பாதுகாக்க பட்டியலிடப்பட்ட சாதி , பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 போன்ற சட்டத்தை இயற்றுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

நவ.,3ல் சென்னையில் திரளாகக் கூடி கோரிக்கை ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழகம் முழுவதும் உள்ள பிராமணர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement