ரயில் பயணிகளுக்கு நவராத்திரி சிறப்பு உணவை அறிமுகம் செய்கிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

புதுடில்லி: நவராத்திரிகை பண்டிகையையொட்டி நாடு முழுதும் 150 ரயில் நிலையங்களில் சிறப்பு உணவை அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே நிர்வாகம்.

இது தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

நவராத்திரியையொட்டி பண்டிகையை கொண்டாட ரயிலில் பயணிப்பவர்களின் வசதிக்காக நவராத்தரி சிறப்பு உணவை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., நாடு முழுதும் சென்னை, லக்னோ, பாட்னா, செகந்திராபாத், ஜலாந்தர், திருப்பதி, ஐதராபாத்,பெங்களூரு, மும்பை, கோல்கட்டா டில்லி உள்ளிட்ட 150 பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென இணையதளம், செயலி வாயிலாக ஆர்டர் செய்து பெற்றுள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement