ஏ.பி.வி.பி., கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தென் தமிழக செயற்குழு கூட்டம் நடந்தது. தென் மண்டல அமைப்புச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார்.

தென் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீராம், தமிழக மாநில செயலாளர் ஹரி கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை நடை முறைப்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். கல்வி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement