காஷ்மீர் தேர்தலில் ஜனநாயகத்திற்கு வெற்றி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

14

சென்னை: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.


ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.


வெற்றி




காங்., கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். இது இண்டியா கூட்டணிக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. மத்திய பா.ஜ., அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும். காஷ்மீரின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கும் தருணம் இது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement