புகாருக்கு மேல் புகார் வருது; தேர்தல் கமிஷனில் சொல்லப்போறோம்: ராகுல் தந்த 'அப்டேட்'

19


புதுடில்லி: 'ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.


இது குறித்து சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன்.
ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி.


ஹரியானாவின் எதிர்பாராத முடிவை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். உரிமைகள், பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். மக்களின் குரலுக்கு ஆதரவாக நிற்போம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் நன்றி. மாநிலத்தில் இண்டியா கூட்டணியின் வெற்றி அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக சுயமரியாதைக்கான வெற்றி. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement