சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் காங்கிரஸ்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

2

மும்பை: 'ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.


மஹாராஷ்டிராவில் மும்பை, நாசிக், ஜல்னா, அமராவதி, கட்சிரோலி, புல்தானா, வாஷிம், பண்டாரா, ஹிங்கோலி மற்றும் தானே ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது தவிர, 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.


நாக்பூரில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கும், ஷீரடி விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஷீரடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


விமான போக்குவரத்து, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியை அதிகரிக்கும். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஹிந்துக்களுக்கு இடையே சண்டையை உருவாக்க காங்கிரஸ் எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை. ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என்றார்.

Advertisement