இந்திய பெண்கள் வெண்கலம் * ஆசிய டேபிள் டென்னிசில் சாதனை

அஸ்தானா: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி முதன் முறையாக வெண்கலப் பதக்கம் பெற்று, புதிய சாதனை படைத்தது.
கஜகஸ்தானில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நேற்று ஜப்பானை சந்தித்தது.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஆயிஹா, 2-3 என (8-11, 11-9, 8-11, 13-11, 7-11), ஹரிமோட்டோவிடம் வீழ்ந்தார். அடுத்த போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, 3-0 என (11--6, 11--5, 11--8), சட்சுகியை வென்றார். ஸ்கோர் 1-1 என சமன் ஆனது.
அடுத்த போட்டியில் இந்தியாவின் சுதிர்த்தா, 0-3 என (9-11, 4-11, 13-15) மிமியிடம் தோற்க, இந்தியா 1-2 என பின் தங்கியது. நான்காவது போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, 1-3 என (3-11, 11-6, 2-11, 3-11) என ஹரிமோட்டோவிடம் தோற்றார். முடிவில் இந்திய பெண்கள் அணி 1-3 என தோல்வியடைந்தது. 27 ஆண்டு ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக வெண்கல பதக்கம் பெற்றது.

Advertisement