அன்புமணி பிறந்த நாள் மருத்துவ முகாம்

அன்புமணி பிறந்த நாள்
மருத்துவ முகாம்
கரூர், அக். 10-
கரூர் மேற்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், மாநில தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழாவையொட்டி, இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மனோகரா கார்னரில் நேற்று நடந்தது.மருத்துவ முகாமை, முன்னாள் எம்.எல்.ஏ., மலையப்பசாமி தொடங்கி வைத்தார். பிறகு, 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு, கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, ரத்த தானம் முகாம் நடந்தது.விழாவில், கரூர் நகர பா.ம.க., செயலாளர் ராக்கி முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement