கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு, தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

நவராத்திரி ஏழாம் நாள் விழாவான நேற்று காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது.

சக்தி கொலுவில் அம்பாள் கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது. மாலையில், நித்யக்ஷேத்ர நடன அகாடமி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, வீரமணி ராஜு இசைக் கச்சேரி நடந்தது.

ஏக தின லட்சார்ச்சனை

பக்தர்களுக்கு அழைப்புசக்தி கொலுவில் நாளை, மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. அம்மன் கொலு சன்னிதியில் காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடத்தப்படுகிறது.இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலத்தில், 250 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். லட்சார்ச்சனைக்கு பின், அம்மன் அருள் பிரசாதம் வழங்கப்படுகிறது.

Advertisement