தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்

தேனி : தேனி தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ்ஷ்யாம் ஷங்கர் கூறியதாவது: மாநில கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கான புதிய உறுப்பினர்கள் பதிவு முகாம் தேனி நகராட்சி அலுவலகத்தில் இன்று(அக்.10) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய வரும் தொழிலாளர்கள் அலைபேசி இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, மின்னணு ரேஷன்கார்டு, வயது ஆவணம் (ஒட்டுநர் உரிமம் அசல், வாக்காளர் அடையாள அட்டை, பள்ளிசான்றிதழ்), வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்ட 2 கொண்டு வர வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உறுப்பினராக பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement