பாரதியார் உடற்பயிற்சி சாலை ஆண்டு விழா

பரமக்குடி : பரமக்குடி பாரதியார் உடற்பயிற்சி சாலை 68-வது ஆண்டு விழா, 96 வயதான ஸ்தாபக ஆசிரியர் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா மற்றும் தேசிய, மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை கவுரவிக்கும் விழாக்கள் நடந்தது.

பயிற்சி சாலை தலைவர் ருக்மாங்கதன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தியாகராஜன் இறை வணக்கம் பாடினார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி ஆசிரியரை கவுரவித்தனர். செயலாளர் பட்டாபிராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னாள் தலைவர் ஈஸ்வரன், சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான நிர்வாக டிரஸ்ட்டி ரெங்காச்சாரி மற்றும் பயிற்சி சாலை நிர்வாகிகள், சவுராஷ்டிரா சபை மற்றும் கல்விக் குழுவினர் வாழ்த்தினர்.

பயிற்சி சாலை மாணவர்கள் சிலம்பம், யோகா, வெயிட் லிப்டிங், பவர் லிப்டிங் உள்ளிட்டவை செய்து காட்டினர்.

Advertisement