சிவகாசி ரத வீதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பக்தர்கள் அவதி

சிவகாசி : சிவகாசி ரத வீதிகளில் காலையில் நடமாடும் தெரு நாய்களால் நடைபயிற்சி மேற்கொள்வோர், கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சிவகாசி தேரடி முக்கில், ரத வீதிகளில் சிவன், பெருமாள், கருப்பசாமி, முருகன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இங்கு சுவாமி கும்பிட காலையில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் காலை நேரத்தில் ரத வீதிகளில் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக பலரும் வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகளில் ஒரு சில வெறி பிடித்து போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகிறது.

இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வருகின்ற மாணவர்களையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் யாருமே நடமாட முடியவில்லை. மேலும் டூவீலரில் செல்பவர்களை விரட்டும் போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

மொத்தமாக ரோட்டில் நாய்கள் திரிவதால் விலகிச் செல்லவும் வழி இல்லை. சில நேரங்களில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டிலேயே படுத்துக் கொள்கின்றன.

இவைகளை விலகிச் செல்லும்போது விரட்டுகிறது. எனவே இப்பகுதிகளில் நடமாடுகின்ற நாய்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement