'முடா' வழக்கால் ஹரியானாவில் தோல்வி: கோலிவாட் கோபம்

1

பெங்களூரு : ''முதல்வர் சித்தராமையா மீதான, 'முடா' வழக்கு ஹரியானாவில் காங்கிரஸ் எதிர்காலத்தை பாதித்துள்ளது,'' என காங்., மூத்த தலைவர் கோலிவாட் குற்றம்சாட்டினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:



ஹரியானா தேர்தல் பிரசாரத்தின் போது, 'முடா' வழக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது முடா வழக்கை சுட்டிக்காட்டினார். இது காங்கிரசின் தோல்விக்கு காரணமானது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என, நான் வலியுறுத்தினேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

காங்., மேலிடம் என்னை ஏன் எச்சரிக்க வேண்டும். நான் மூத்த தலைவர். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் நல்லுறவு வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடியாக, வீட்டுவசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ''முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா, ராஜினாமா செய்ய வேண்டும் என, கோலிவாட் கூறியுள்ளார். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல இவர் யார். முதல்வர் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

''அவர் எந்த தவறும் செய்யவில்லை. கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவாக உள்ளது. சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, சோனியா, ராகுல், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளனர்,'' என்றார்.

Advertisement