செல்லப்பிராணிகளுக்காக மனம் உருகிய ரத்தன் டாடா!

4

மும்பை: மும்பையில் வளர்ப்பு பிராணிகளுக்காக தொழிலதிபர் ரத்தன் டாடா, நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையை துவக்கினார். எத்தனையோ நிறுவனங்களை தான் துவக்கினாலும், நடத்தினாலும் தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது இதுதான் என்று அந்த மருத்துவமனை பற்றி டாடா குறிப்பிட்டுள்ளார்.


@1br@தொழிலதிபர் ரத்தன் டாடா செல்லப் பிராணிகள் மீது அதிக பற்று கொண்டவர், அதிலும் குறிப்பாக நாய்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி நாய்களின் புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவிடுவார். மேலும் அவற்றின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார். எத்தனையோ நிறுவனங்கள், அறக்கட்டளைகள் துவக்கி நடத்தினாலும், தன் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான திட்டம் என்று அவர் குறிப்பிட்டது செல்லப்பிராணிகளுக்காக அவர் தொடங்கிய சிறப்பு மருத்துவமனை தான்.


Tamil News
அவரது முயற்சியால் டாடா டிரஸ்ட் சார்பில், ரூ. 165 கோடி செலவில் , நாட்டிலேயே முதன்முறையாக, 24x7 அவசர சிகிச்சையுடன் கூடிய அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனை மும்பையில் திறக்கப்பட்டது. செல்லபிராணிகளுக்கு மருத்துவமனை கட்டும் திட்டம் 2017ல் அறிவிக்கப்பட்டபோது, நவி மும்பையில் கட்டப்படத் திட்டமிடப்பட்டது.


* ஆனால், நீண்ட தூர பயணம் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு சிக்கலாக இருக்கும் என்பதை உணர்ந்த ரத்தன் டாடா, மும்பையின் மையப் பகுதியில் மாற்ற முடிவு செய்தார். தற்போது அந்த மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


* தீவிர நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க ICU வசதி, CT ஸ்கேன், MRI, X-ray மற்றும் அறுவை சிகிச்சை வசதிகள் இந்த மருத்துவமனையில் உள்ளது. 200 நோய்வாய்ப்பட்ட செல்லப்பிராணிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் வசதி இங்கு உள்ளது



'செல்லப்பிராணிகள் ஒரு குடும்ப உறுப்பினரிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நம்புகிறேன், எனது வாழ்நாள் முழுவதும் பல செல்லப்பிராணிகளின் வளர்த்துள்ளேன், இந்த மருத்துவமனையின் அவசியம் எனக்குத் தெரியும்' என ரத்தன் டாடா கூறியிருந்தார்.


இந்த திட்டம் தான், ரத்தன் டாடா மறைவுக்கு முன்னதாக கடைசி முயற்சியாக துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement