ஊழலை ஒழிப்பது எப்படி: டாடா சொன்ன பதில் இதுதான்!

7



புதுடில்லி: ''ஒவ்வொரு நாளும், நான் லஞ்ச ஊழல் செய்யவில்லை என்ற நிம்மதியோடுதான் இரவு படுக்கைக்கு செல்ல விரும்புகிறேன்,'' என்பதே ஊழலுக்கு எதிரான ரத்தன் டாடாவின் நிலைப்பாடாக இருந்துள்ளது.


மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, லஞ்ச ஊழலுக்கு எதிரானவர். அவர் 2010ல் அளித்த ஒரு நேர்காணலில் லஞ்ச ஊழல் பற்றி இன்னொரு தொழிலதிபருடன் நடந்த உரையாடல் பற்றி குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த தொழிலதிபர், 'வியாபார ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் ஒருவருக்கு நீ்ங்கள் 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால் போதும்' என்று ஆலோசனை கூறியள்ளார்.

அதற்கு டாடா மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த தொழிலதிபர், 'இப்போதுள்ள நடைமுறையில் லஞ்சத்தை நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்' என்று கேட்டுள்ளார்.


அதற்கு டாடா, 'அதெல்லாம் சுய ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தால் போதும்; லஞ்சத்தை தவிர்த்து நிறுவனங்களை நடத்த முடியும். அவையெல்லாம் லஞ்சம் கொடுத்துப் பழகி விட்ட உங்களுக்குப்புரியாது' என்று கூறியுள்ளார்.


ஒவ்வொரு இரவும், 'நான் லஞ்ச ஊழல் என்னும் தவறை செய்ய வில்லை என்ற நிம்மதியோடு தான் படுக்கைக்கு செல்ல விரும்புகிறேன்' என்று டாடா கூறியுள்ளார்.

Advertisement