சீன எல்லையில் ரூ.2,236 கோடி திட்டம்: அக்.,12ல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

4

புதுடில்லி: சீன எல்லையில் 2,236 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, வரும் அக்டோபர் 12ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.


பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
லடாக், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் எல்லைப்பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும்படி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் 12ம் தேதி ரூ.2,236 கோடி மதிப்பிலான 75 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

அவர் அக்டோபர் 11ம் தேதி சிக்கிம் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு குப்புப்-ஷெரதாங் சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.

மேலும் அன்று, காங்டாக்கில் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில், உரையாற்ற உள்ளார், இந்த உயர்மட்ட கூட்டம், முதல் முறையாக சீன எல்லைக்கு அருகில் நடைபெறும்.

எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) தொடங்கி உள்ள 111 சாலை திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார்.

Advertisement