ஊராட்சிகளில் வளர்ச்சி பணி கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

ஏனாதிமங்கலம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கரைசுற்று பகுதிகளில் பனைவிதை நடுவது தொடர்பாக ஆய்வு செய்தார்.

பின், மேலமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் 5.09 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் கட்டி வரும் வீடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 3.53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து தென்மங்கலம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், நீர்வளத்துறை செயற் பொறியாளர் ஷோபனா, திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஊராட்சிக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் அன்பழகன், தாசில்தார் செந்தில்குமார் உட்பட பி.டி.ஓ.,க்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement