குட்கா வியாபாரி உட்பட 5 பேர் கைது கள்ளக்குறிச்சியில் 81 கிலோ பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குட்கா வியாபாரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்னர். 81 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ராபின்சன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அவ்வழியாக ேஹாண்டா டியோ ஸ்கூட்டியில் (டி.என் 22 சி.எஸ் 8433) வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள், 16.440 கிலோ குட்கா பொருட்களை எடுத்து வந்தது தெரிந்தது.

விசாரணையில், கருணாபுரம் ராமசாமி மகன் வீரன்,26; ஏமப்பேர் சக்திவேல் மகன் சதீஷ்,22; என்பதும், அவர்கள் குட்கா பொருட்களை சின்னசேலத்தில் இருந்து எடுத்து வருவதாகவும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாபு, 52; என்பவருக்கு கொடுக்க சென்றதாகவும் தெரிவித்தனர்.

பாபுவிடம் விசாரித்ததில், சின்னசேலத்தை சேர்ந்த ராஜேஷ்கான்,48; என்பவரது கடையில் இருந்து குட்காவை வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதற்கு முன், குட்கா வாங்கி வருவதற்கு நீலமங்கலம் நெடுமாறன், 65; என்பவரை ஈடுபடுத்தியுள்ளார். அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்து, ஒரு கிலோ 100 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், சின்னசேலத்தை சேர்ந்த மொத்த வியாபாரியான ராஜேஷ்கான் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சின்னசேலத்தில் உள்ள வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷ்கான் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ராஜேஷ்கானிடம் இருந்த 64.126 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 81.722 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement