'மக்களின் அடிப்படை தேவைகளுக்கு குரல் கொடுப்போம்'

திருக்கோவிலுார் மற்றும் மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராக மக்களின் நலம் விரும்பியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என டி.ஜி.கணேஷ் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது;

திருக்கோவிலுார் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மக்களின் நலன் விரும்பி என்ற அடிப்படையில், பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். கல்விதான் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணர்ந்த காமராஜரின் கருத்திற்கேற்ப பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பாடப்புத்தகங்கள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறோம்.

அண்ணா கொள்கைக்கு ஏற்ப ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம், ஏழ்மையை போக்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்து பல்வேறு சேவைகளை தனிப்பட்ட முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். எல்லோரையும் மதிப்பது அறிவு, எல்லோரையும் சமமாக நினைப்பது பகுத்தறிவு என்ற அடிப்படையில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் கொள்கையுடன், அயராத உழைப்பு, நிரந்தர வெற்றி என்ற தாரக மந்திரத்தை மூச்சாகக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கடவுள் மீதான பற்று, துணிவு, நேர்மைக்கு வழி வகுக்கிறது. வெற்றிக்கு உழைப்பு அவசியம், உயர்ந்தால் பணிவு தேவை, என்றுமே மக்கள் தான் எஜமானர்கள் இதனை உணர்ந்து மக்களின் மனதில் இடம்பிடித்து இருக்கிறோம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு ஏற்ப எனது செயல்பாடு அமைந்திருக்கும் என, கூறினார்.

Advertisement