டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி தரமான தொழில்நுட்ப கல்விக்கான முன்னோடி

தரமான தொழில்நுட்ப கல்விக்கு முன்னோடியாக டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி இருப்பதாகவும், 100 சதவீத வேலை வாயப்பினை ஏற்படுத்தி தருவதாகவும் அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இது குறித்து கல்லுாரி நிர்வாக இயக்குநர் மனோகர்குமார் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி அருகே மேலுாரில், 26.70 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்லுாரி, தனித்துவமான உயர் தர தொழில்நுட்ப கல்வியை வழங்குகிறது. சென்னை அண்ணா பல்கலை கழகத்துடன் இணைந்த இந்த கல்வி நிறுவனத்திற்கு, ஏ.ஐ.சி.டி.இ., புதுடெல்லி அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு ஆக்கபூர்வமான சூழலை வழங்கி, தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

5 இளநிலை பொறியியல் பிரிவுகளும், 4 முதுநிலை பொறியியல் பிரிவுகளும் உள்ளன. கல்லுாரி முதல்வர் டாக்டர் ஈஸ்வரன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் பிஎச்.டி. முடித்துள்ளார். இதற்காக, யு.ஜி.சி.,ல் ராஜீவ்காந்தி நேஷனல் பெல்லோஷிப் பெற்றுள்ளார். குறிப்பாக, 'கேட்' தேர்வில் தகுதி பெற்று, ஐ.எஸ்.ஏ., பரிவர்த்தனைகளுக்கான சிறந்த மதிப்பாய்வாளராகவும், எல்சேவியர் நிறுவனத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஆறு தேசிய கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தி, டி.ஆர்.டி.ஓ., சி.எஸ்.டு.ஆர்., ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., மற்றும் எஸ்.இ.ஆர்.பி., உள்ளிட்ட முக்கிய அரசாங்க நிதி நிறுவனத்திடமிருந்து கருத்தரங்கு மானியங்களை பெற்றுள்ளார்.

கல்லுாரி செயலாளர் அசோக்குமார் சமூக பொறுப்புணர்வு மற்றும் கல்வியுடன் இணைந்த 'உன்னத பாரத் அபியான்' திட்டத்தை அருகிலுள்ள 5 கிராமங்களில் வெற்றிகரமாக செயல்படுத்துகிறார். என்.எஸ்.எஸ்., செயல்பாடுகளின் கீழ் மாணவர்கள் சமூக பணியில் ஈடுபட்டு, கிராம மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சிறு பங்களிப்பை அளித்து வருகின்றனர். பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாயப்பு முகாம் நடத்தி, 100 சதவீத வேலைவாய்ப்பினை பெற்று தருகிறது. இவ்வாறு மனோகர்குமார் தெரிவித்தார்.

Advertisement