மக்கள் தொடர்பு திட்ட முகாம்

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த தொட்டியம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கெலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மலையரசன் எம்.பி., துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., லுார்துசாமி வரவேற்றார்.

உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை, குடிமை பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, மாற்று திறனாளிகள் நலம் உட்பட பல்வேறு அரசு துறை சார்பில் 206 பயனாளிகளுக்கு 12 லட்சத்து 16 ஆயிரத்து 97 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கால்நடை துறை துணை இயக்குனர் கந்தசாமி, சமூக பாது காப்பு திட்ட துணை ஆட்சியர் குப்புசாமி, மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், குடிமை பொருள் தாசில்தார் கமலம், ஊராட்சி தலைவர் பார்வதி ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement