காட்டுமிராண்டிகள், விலங்குகள்: புலம் பெயர்ந்தவர்களை வசை பாடிய டிரம்ப்!

10

நியூயார்க்: அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகள், விலங்குகள் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வசை பாடினார்.


அமெரிக்காவில் நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிசை, டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது.


மரண தண்டனை



இந்நிலையில், அரோராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளது. இதனை, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆதரிக்கிறார். அவர் ஒரு குற்றவாளி. சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகள், விலங்குகள். அமெரிக்க குடிமகன் அல்லது சட்ட அமலாக்க அதிகாரியை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.


ஆக்கிரமிப்பு



சட்டவிரோதமாக குடியேறியவர்களை எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவோம். நவம்பர் 5ல் நடக்க உள்ள அமெரிக்கத் தேர்தலில், நான் வெற்றி பெற்றால், சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement