பண்டிகை காலத்தில் கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்தும் வழிகள்!

டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதாக, டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான அண்மை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில், டெபிட் கார்டு பயன்பாட்டைவிட கிரெடிட் கார்டு பயன்பாடு 3.9 மடங்கு அதிகரித்துள்ளது.


கிரெடிட் கார்டு பயன்பாடு பலவித அனுகூலங்களை கொண்டிருந்தாலும், மிகையாக செலவு செய்யும் அபாயம் இருப்பதை மனதில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பண்டிகை
காலத்தில், வங்கிகள், கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. பண்டிகை
காலத்தில் கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்த்தும் வழிகளை பார்க்கலாம்.

மிகை செலவு:



பண்டிகை காலத்தில், இ-காமர்ஸ் நிறுவனங்கள் சலுகை களை வாரி வழங்குவதால்,
திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்ய நேரலாம். சரியான நேரத்தில் தொகையை செலுத்தவில்லை எனில் கிரெடிட் கார்டு கடன் சுமையாக மாறிவிடும். கார்டு கடனுக்கான
வட்டியும் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

திட்டமிடல்:



கூடுதலாக செலவு செய்வதை தவிர்க்க, திட்டமிட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். எனவே, வாங்க விரும்பும் பொருட்களை முதலில் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். இந்த பொருட்களை வாங்குவதற்கான பட்ஜெட்டை வகுத்துக்கொள்வதும் மிகவும் அவசியம்.

சலுகைகள்:



கிரெடிட் கார்டுகள் பல்வேறு சலுகைகள், தள்ளுப்படி வாய்ப்புகளை கொண்டுள்ளன. நீங்கள் வாங்க விரும்பும் பட்டியலில் உள்ள பொருட்களுக்கான சலுகைகளை தேடி கண்டறிந்து பயன்
படுத்திக் கொள்ள வேண்டும். கேஷ்பேக் வாய்ப்புகளும் பொருந்து
கின்றனவா என பார்க்க வேண்டும். இவை செலவை குறைக்க உதவும்.

ரொக்க பயன்பாடு:



கிரெடிட் கார்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்றது. சில நேரங்களில் ரொக்கமாக செலவிடும் தேவை ஏற்பட்டாலும், கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கான வட்டி விகிதம் அதிகம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடன் வலை:



கார்டில் வாங்கிய தொகையை உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும். குறைந்தப
ட்ச தொகையை செலுத்தும் வாய்ப்பு இருந்தாலும் இதை தவிர்ப்பது நல்லது. இது எளிதாக இருந்தாலும், கடன் சுமையை அதிகரிக்கும். கிரெடிட் கார்டு கடனுக்கான மாதத்தவணை
கையாளக்கூடிய விகிதத்தில் இருப்பதும் அவசியம்.

Advertisement