இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்



போச்சம்பள்ளி: புரட்டாசி மாதத்தின், 4வது சனிக்கிழமை நேற்று முன்தினம் முடிந்ததை அடுத்து நேற்று போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்-டார பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளில் அதிகளவு அசைவ பிரியர்கள் குவிந்தனர். ஆட்டிறைச்சி கிலோ, 700 ரூபாய் முதல், 800 ரூபாய் வரை விற்கப்பட்டது. விலை அதிகமாக இருந்தும், அதை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் வாங்கிச் சென்-றனர். போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு விவசாயிகள், வியாபா-ரிகள் விற்பனைக்கு ஆடுகளை குறைந்த அளவே கொண்டு வந்தி-ருந்தனர். ஆனால், அசைவ பிரியர்கள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டாததால் ஆடுகள் விற்பனை மந்த நிலையில் இருந்தது.


இதுகுறித்து ஆட்டு வியாபாரி காதர் கூறுகையில், ''புரட்டாசி மாதத்தின், கடை4சி சனிக்கிழமை நேற்று முன்தினம் முடிந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால், கிராம மக்கள் ஆடுகளை வாங்கி, பங்கு போட்டு கறியை எடுத்துச் செல்ல, காலதாமதம் ஏற்படும் என்பதால், வாரச்சந்-தைக்கு வந்து, ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டாததால், இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியது,'' என்றார்.

Advertisement