கடையடைப்பு போராட்டம்

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மேட்டில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருக்கன்குடி ஊராட்சி நத்தத்துப்பட்டி ஊராட்சிகளுக்கு இடையே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் எல்லை குறித்து இரு ஊராட்சிகளுக்கு இடையிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

எல்லை பிரச்னையில் சுமூக தீர்வு காண வலியுறுத்தி நேற்று மாரியம்மன் கோயில் மேட்டில், அர்ச்சுனா நதி, வைப்பாறு நதியில் தற்காலி கமாக தேங்காய், பழம், மாலை, பேன்சி ஸ்டோர், சேவுமிட்டாய், பொம்மை, வளையல், டீ, வடைக் கடை, ஜவுளி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் வழக்கம் போல் பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தி அம்மனை தரிசித்து சென்றனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கடை வீதி வெறிச்சோடியது. வியாபாரிகள் இருக்கன்குடி சமுதாயகூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement