விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்ச்சி

தேவகோட்டை: விஜயதசமியை முன்னிட்டு தேவகோட்டையில் உள்ள முக்கிய கோயில்களில் உள்ள சுவாமிகள் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் உள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளி, ஆயுதங்கள் வைத்து பூஜை செய்து வெற்றி பெறும் என்ற ஐதீக மரபுபடி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

நேற்று மாலை தேவகோட்டையில் நேற்று மாலை கன மழை பெய்த காரணத்தால் சுவாமிகள் எழுந்தருள தாமதமானது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவிலில் இருந்து அம்பிகைகளின் மைந்தன் முருக பெருமானும், கோதண்டராமர் ஸ்வாமி, ரங்கநாத பெருமாள், கிருஷ்ணன் கோயில் இருந்தும் ஐந்து சுவாமிகள் குதிரை வாகனங்களில் இரவு 9:00 மணியளவில் எழுந்தருளி சுவாமிகள் அம்பு எய்தனர்.

வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்க வேண்டியபடி பக்தர்கள் போட்டி போட்டு அம்புகளை எடுத்தனர். கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement