சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளம்; மின்கம்பம் சேதம்

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிங்கம்புணரி பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றிற்குள் இருந்த மின்கம்பம் சேதமடைந்து சாயும் நிலைக்கு சென்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் கரந்தமலை பகுதியில் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு சிவகங்கை மாவட்டம் வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பாலாறு சிங்கம்புணரி வழியாக திருப்புத்துார் அருகே பெரிய கண்மாயில் சேகரமாகிறது.

அங்கிருந்து விரிசுழி ஆறு வழியாக சென்று ராமநாதபுரம் அருகே கடலில் கலக்கிறது. இந்த வெள்ள நீர் சிங்கம்புணரி அருகே அணைக்கரைபட்டி, சிவபுரிபட்டி உள்ளிட்ட பாலத்தை தொட்டு கரைபுரண்டு ஓடுகிறது. அணைக்கரைப்பட்டி பாலம் அருகே இருந்த உயர் அழுத்த மின்கம்பம் சேதமடைந்து சாயும் நிலைக்கு சென்றது. பல்வேறு இடங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமானது. ஆற்றில் மரங்கள் அடித்து வரப்பட்டன. பாலாற்றில் வெள்ளத்தால் சிங்கம்புணரி, திருப்புத்துார் தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement