தற்காப்புக்கலையில் மாணவியர் அதிரடி




சென்னையில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருவது போலவே ஜெயின் சமூகத்தினரும் திரளாக வசித்து வருகின்றனர்.அவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதில் ஒன்றாக வளரும் இளம் பருவத்தினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தற்காப்பு கலை கற்றுத்தருகின்றனர்.பயிற்சியின் நிறைவு விழாவில் குழந்தைகள் தாங்கள் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலைகளை செய்துகாட்டி பாராட்டுக்களை பெற்றனர்.
Latest Tamil News
குறிப்பாக பள்ளி மாணவியர் தங்களை எப்படி எல்லாம் தற்காத்துக் கொள்ளமுடியும் என்பதை செய்து காட்டிய போது கூடியிருந்த பெற்றோர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

சென்னை கீழ்பாக்கம் ஸ்வேதாம்பர் மூர்த்தி பூஜக் ஜெயின் சங்க அறக்கட்டளை வளாகத்தில் ஷ்ருத் கலா சபா என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த வகுப்பில் 7 முதல் 18 வயது வரையிலான மாணவ,மாணவியர் சேர்ந்து இலவசமாக பயிற்சி பெற்றனர்.
Latest Tamil News
இது குறித்து அமைப்பின் பிரதிநிதி குணால்ஜி பேசுகையில்,தற்காப்பு போன்ற நடைமுறை திறன்களக் கொண்டு குழந்தைகளை மேம்படுத்துவது இன்றைய உலகிற்கு இன்றியாமையாதது, இது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் தரும் என்றார்.இது போன்ற குழந்தைகள் மீதான அன்பும் அக்கறையும் கொண்ட எங்கள் முயற்சிகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement