குலசை தசரா


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள சிறிய நகரமான குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான குலசை முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மிகக்குதுாகலமாக நடந்து முடிந்துள்ளது.
Latest Tamil News
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தசரா போலத்தான் இங்கும் பத்து நாள் திருவிழாதான் நடைபெறுகிறது ஆனால் இங்கு நடைபெறும் இந்த குலசை திருவிழா புகழ் பெற்றுவிளங்கக் காரணம் பக்தர்கள் விதவிதமான வேடங்களில் விரதமிருந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவதுதான்.
Latest Tamil News
மகிசாசுரன் என்ற அரக்கனின் சித்திரவதைக்கு ஆளான நிலையில் தேவலோகவாசிகள் தேவியை அணுகி தங்களை காப்பாற்றுமாறு கேட்டனர்.அதற்கேற்ப தேவி சக்தியால் உருவான குழந்தையே லலிதாம்பிகை.இந்த குழந்தை ஒன்பது நாட்களில் அமானுஷ்ய சக்தி படைத்த குழந்தையாக வளர்ந்து பத்தாவது நாளில் மகிசாசுரவை கொன்று வதம் செய்ததையே இங்கு பத்து நாள் விழாவாக கொண்டாடுகின்றனர்.
Latest Tamil News
கடந்த 2ஆம் தேதி துவங்கிய விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.இந்த ஒன்பது நாட்களும் அம்மன் விதம்விதமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அக்டோபர் 12ஆம் தேதி நள்ளிரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் அரக்கனை சம்காரம் செய்தார்.நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனைகளுடன் காப்பு கலைதல் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.
Latest Tamil News
படங்கள்:செந்தில் விநாயகம்

Advertisement