ஏ.ஐ.,யை முழுசா நம்பினால் அவ்வளவுதான்: எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்!

3

மும்பை: 'செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகியவை நிதிச்சேவை நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரே அடியாக அவற்றை சார்ந்து இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது' என இன்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பயன்பாடு, இணையத் தாக்குதல் மற்றும் வங்கி தகவல் களவு போகும் அபாயத்தை அதிகரிக்கும்.

குறிப்பாக, தொழில்நுட்ப சந்தையில், குறைந்த எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே வங்கிகளும், நிதிச் சேவை நிறுவனங்களும் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.

Advertisement