தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்க வேண்டுகோள்
மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலத்தில், இந்த நிதியாண்டிற்கான புதிய, தார்சாலை அமைக்கும் பணி கடந்த ஆக., மாதம் துவக்கப்பட்டது. இதில், 116 சாலைகள் 19.37 கி.மீ., துாரம், 10.71 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மடிப்பாக்கம், ராஜராஜேஸ்வரி நகர், ராஜலட்சுமி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட சில நகர்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாததால், சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.
போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்படுகின்றன. சிறிது மழை பெய்தாலும், சகதியாக மாறி விடுகின்றன.எனவே, தொடர் மழை பெய்வதற்குள், சாலையில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி, சாலையை சீராக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement