மகனுக்கு செக்ஸ் தொல்லை மைத்துனரை கொன்ற தந்தை
மதுரை: மதுரையில் மகனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மைத்துனரை வீடு புகுந்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் ராமர் 30. டிரை சைக்கிள் ஓட்டுநர்.
இவரது சின்ன மாமியாரின் மகன் விஜய் 28. இருவரது வீடுகளும் அடுத்தடுத்த தெருவில் உள்ளன.
விஜய் கோவையில் கூலித்தொழிலாளியாக இருந்தார்.
தீபாவளிக்காக வீட்டிற்கு வந்திருந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது 10 வயது மகனை தேடி விஜய் வீட்டிற்கு ராமர் சென்றார்.அங்கு மகனுக்கு விஜய் செக்ஸ் தொல்லை கொடுத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரை கண்டித்துவிட்டு மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார். தனக்கு 'தொல்லை' கொடுத்ததை நினைத்து மகன் அழுதார்.
இதனால் விஜய் மீது ஆத்திரமுற்ற ராமர், மீண்டும் அவரது வீட்டிற்கு சென்றார்.
துாங்கிக்கொண்டிருந்த விஜய் மீது பீரோ 'கால்களுக்கு' வைத்திருந்த கல் ஒன்றை எடுத்து தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராமரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.