போலீசார் மீதான வழக்கு நவ.11 க்கு தள்ளிவைப்பு  

ராமநாதபுரம், : -பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு விசாரணை நவ.,11 க்கு தள்ளி வைக்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவரை திருட்டு வழக்கு விசாரணைக்காக 2012 அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர் போலீஸ் ஸ்டேஷனில் இறந்தார். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஏட்டுகள் கோதண்டம், ஞானசேகரன் ஆகியோர் ஆஜராகினர். கிருஷ்ணவேல் ஆஜராகவில்லை. நீதிபதி குமரகுரு வழக்கு விசாரணையை நவ.11க்கு தள்ளி வைத்தார்.

Advertisement