ஈரோட்டில் மாநில அளவில் தடகள போட்டி துவக்கம் ஈரோடு, நவ. 7- ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 65வது குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். பின், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, தடகள போட்டிக்கான உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றனர். கலெக்டர், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆ
ஈரோட்டில் மாநில அளவில்
தடகள போட்டி துவக்கம்
ஈரோடு, நவ. 7-
ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 65வது குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டிகள் நேற்று துவங்கியது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். பின், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, தடகள போட்டிக்கான உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றனர். கலெக்டர், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் மூவர்ண பலுான்களை பறக்க விட்டனர். தொடர்ந்து மாணவ-, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, மாணவிகளுக்கான தடகள போட்டி துவங்கியது. 2,517 மாணவிகள் பங்கேற்றனர். வரும், 8 வரை போட்டி நடக்கிறது. மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாநகராட்சி கமிஷனர் மணிஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.