செய்தி எதிரொலி சேதமடைந்த கம்பம் மாற்றம் மின்வாரிய ஊழியர்கள் அதிரடி

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள பஜார் பகுதியை ஒட்டி சாவடி தெருவில் தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

தினமும், 200க்கும் மேற்பட்டோர் சென்று வரும் இச்சாலையில், சார்நிலை கருவூலம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மேல்பகுதி உடைந்து காணப்பட்டது.

இதுகுறித்து, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகளுக்கு, பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் உடைந்த மின்கம்பத்திற்கு மாற்றாக, புதிய மின்கம்பத்தை அமைத்தனர்.

Advertisement