எஸ்.கே. மருத்துவமனையில் ரோபோடிக் கருவியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
எஸ்.கே. மருத்துவமனையில் ரோபோடிக்
கருவியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
ஈரோடு, நவ. 7-
ஈரோடு பகுதியில் வசிக்கும், 46 வயது ஆண் நோயாளிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மூட்டு வலி இருந்தது. மூட்டு மிகவும் மோசமாக தேய்ந்து, வளைந்து இருப்பதை பல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
ஈரோட்டில் முதல் முறையாக, ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை, ஈரோடு எஸ்.கே. மருத்துவமனையில் செய்வதை அறிந்து, அங்கு சிறப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். குமரவேலிடம் ஆலோசனை பெற்றார். இதையடுத்து இவருக்கு, ரோபோடிக் கருவி மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய வளைந்த கால் துல்லியமாக நேர்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை பற்றி, சிறப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். குமரவேல் கூறியதாவது: இவ்வாறான மிக மோசமான தேய்மானத்தை, சாதாரண மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறையில் செய்யும்போது மிகக் கடினமாக இருக்கும். இந்த துல்லியம் அடைவதில் சிரமம் இருக்கும். ரோபோடிக் கருவி மூலம் செய்வதால், மிக சுலபமாக 100 சதவீதம் நேர் செய்ய முடியும்.
இவ்வாறு கூறினார்.