ஊராட்சிகளில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை
ராஜபாளையம்: மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் திடக் கழிவு மேலாண்மையை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையிலான திட்டம், செயல்பாடு இல்லாததால் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவது தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் கழிவுகளை ஓடைகள் தெருக்களில் வீசுவதால் சுகாதார பிரச்சனை ஏற்படுவதோடு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம்செயல்படுத்தப்பட்டு வரகிறது.
ஊராட்சி அமைப்புகள் இதனை முறையாக செயல்படுத்தாமல் உள்ளது.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 36 ஊராட்சிகளிலும் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் துாய்மை காவலர்கள் கழிவுகளை அகற்றி அதற்கான தொட்டியில் போட்டு பிரிக்காமல் எரித்து விடுகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட மண்புழு உர உற்பத்தி கிடங்குகள், திறந்தவெளி குப்பை தொட்டிகள் நோய் பரப்பும் கூடமாக மாறி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.