தி.மு.க., பிரமுகரிடம் ரூ.35,000 பறிப்பு

தி.மு.க., பிரமுகரிடம்
ரூ.35,000 பறிப்பு
சேலம், நவ. 7-
சேலம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் மோகன், 26. சேலம் மாநகர தி.மு.க., வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ள இவர், அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை, அவர் அஸ்தம்பட்டி செல்லியம்மன் கோவில் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல், சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த, வசூல் பணம், 35,000 ரூபாயை பறித்துச்சென்றதாக, அவரது நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் வந்து பார்த்தபோது, காயம் அடைந்திருந்த அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோகன் புகார்படி அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement